Perambalur District DMK Women’s Members’ Card Deputy General Secretary A. Raja, M. P. delivered!

பெரம்பலூர் மாவட்டதிமுக , மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கிளை கழகங்களில் புதிய மகளிர் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று இருந்த நிலையில், பெரம்பலூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 ஆயிரம் புதிய உறுப்பினர்களுக்கான அட்டையை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா.எம். பி., மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் முன்னிலையில், மகளிரணி மற்றும் அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகளிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கேசிஆர் குமார், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, எஸ். நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், நகரச்செயலாளர் எம். பிரபாகரன், பேரூர் கழகச் செயலாளர் ஏ.எஸ்.ஜாகிர்உசேன், பசும்பலூர் ஊராட்சி கழகச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!