Perambalur District farmers call to get soil health card

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

“மண்வளமே விவசாயிகளின் நலம்” என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கு மண்பரிசோதனை செய்து மண்வளத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது, மண்வளம் என்பது பயிருக்கு தேவையான அனைத்து ஊட்டச்த்துகள், நன்மை தரும் நுண்ணுயிர்கள் மண் புழுக்கள், கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.

மேற்கூறிய அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மட்டுமே, மண் ஜீவன் உள்ளதாக கருதப்படும். இத்தகைய மண்ணில் மட்டும், அங்ககச் சத்து அதிகரித்து காணப்படுவதுடன், இம்மண்ணில் விளையும் பயிர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்து, விவசாயிகளுக்கு நிலையான வருமானம் பெற இயலும்.

உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தீவிர பயிர் சாகுபடியில், அளவிற்கு அதிகமான இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டு, மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள் எண்ணிக்கையில் குறைக்கப்பட்டு, மண் உயிரற்றதாகின்றது.

இத்தகைய மண்ணில் விளையும் பயிர்களின் வளர்ச்சி குன்றி பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது. மண் மாசுபடுதல், மாறி வரும் பருவ நிலைகளின் விளைவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் 1980-ம் ஆண்டில் 1.26 சதவீதமாக இருந்த மண்ணின் அங்ககச் சத்து 2013-14-ம் ஆண்டில் 0.68 சதவீதமாக குறைந்துள்ளது.

எனவே, விளை நிலங்களின் மண் வள நிலையினை குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிந்து, அதற்கேற்ப பயிருக்கேற்ற சமச்சீர் உரங்களை இடுவதும், அதிக அளவில் தழை மற்றும் தொழு உரங்களை உபயோகிப்பதால் மட்டுமே இழந்த மண் வளத்தை மீட்கவும் பாதுகாக்கவும் முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டே தமிழக முதலமைச்சரால் 2011-2012-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணைக் குடும்பங்களுக்கும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் அனைத்து விவசாயிகளின் விளை நில மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடித் திட்டத்தை மேற்கொள்ளவும், பயிர் வாரியான இடுபொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை இடவும், திட்டப்பயன்கள் குறித்து அறியவும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு மூலம் வழிவகை செய்யப்பட்டது. மேலும் போதிய அளவு உரமிடவும், பண்ணை மற்றும் பருவ வாரியான உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் குறித்த விபரங்களை பராமரிக்கவும் இந்த கையேடு விவசாயப் பெருமக்களுக்கு பேருதவியாக விளங்கியது.

தமிழகத்தின் இத்திட்டத்தினை முன்னோடியாக கொண்டு பாரத பிரதமரால் அவர்களால் சென்ற ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் “மண் வள அட்டை” வழங்கும் திட்டமானது துவக்கப்பட்டது கடந்த மூன்று ஆண்டுகளாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக மண் வள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மண் வள அட்டையின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தினை அறிந்து கொள்ளவும், மண்ணில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதை அறிந்து, சீh;திருத்த முறைகளை மேற்கொண்டு, அப்பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய இயலும். மேலும், விவசாயிகள் தங்கள் மண்ணிற்கேற்ற பயிரை தேர்வு செய்து சாகுபடி செய்யவும், பயிருக்கேற்ற பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட உரங்களை இடவும் மண் வள அட்டை பெரிதும் உதவுகின்றது.

இரசாயன உர உபயோகத்தை குறைத்து அதிக அளவில் தொழு ஃ தழை உரம், பசுந்தாளுரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கவும் மண் வள அட்டையின் மூலம் பரிந்துரை செய்யப்படுகின்றது. இவ்வாறு தேவைக்கேற்ப அங்கக மற்றும் இரசாயன உரங்களை உபயோகிக்க வழி வகை செய்வதால் சாகுபடி செலவு குறைக்கப்படுவதுடன், அளவுக்கு அதிகமாக இரசாயன உரங்கள் மண்ணில் இடப்படுவது தவிர்க்கப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்படுகின்றது.

“மண் வள அட்டை” வழங்கும் திட்டமானது தமிழகத்தில் 2015-2016-ம் ஆண்டு முதல் செயலாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் புவியியல் விபரங்களுடன் கூடிய கட்ட அடிப்படையிலான (இறவை பரப்பில் 2.5 எக்டருக்கு ஒரு மாதிரி மற்றும் மானாவாரிப் பரப்பில் 10 எக்டருக்கு ஒரு மாதிரி) மண் மாதிரிகள் ((Grid Sampling along with GPS Co-ordinates) சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் பயிருக்கேற்ற உரப்பரிந்துரையுடன் கூடிய மண் வள அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

உரச்செலவை குறைத்து, உர விரயத்தை தவிர்த்து, விளை நிலங்களின் மண் வளத்தை பேணுவதில் பெரும் பங்காற்றும் இம்மண் வள அட்டையின் முக்கியத்துவத்தை உணா;ந்து விவசாயிகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் மண் வள அட்டையினை பெற்று, அதனை உபயோகித்து, அதில் குறிப்பிட்டுள்ளவாறு உரங்களை பயன்படுத்தி, விவசாயம் செய்து, அதிக மகசூல் பெற்று, வேளாண்மையில் அதிக வருமானம் பெற்று இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானத்தை பெற்று பயனடைய கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for NEWS - Kalaimalar.

error: Content is protected !!