Perambalur district farmers’ grievance day meeting!
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.05.2022 அன்று காலை 10.00 மணியளவில் கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில், கலெக்டர் கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் ஆதாரமாக கணினி சிட்டா கொண்டு வர வேண்டும். அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.