Perambalur District Farmers Grievance Redressal Day Meeting: Collector allowed to take silt in 290 lakes!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் ரூ.2,29,340 லட்சம் மானியத்தில் 13 விவசாயிகளுக்கு வேளாண்மை சார்ந்த கருவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2023 பிப்ரவரி மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 38 மி.மீ., பெய்த மழையளவு 33.45 மி.மீ, ஆகும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்சமயம் 94,280 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலை துறையின் மூலமாக தமிழ்நாடு நீர் பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரம்பரியத்திலிருந்து தோட்டக்கலை பயிர்களுக்கு பல்வகைப்படுத்தும் இனத்தில் மிளகாய், கத்தரி, முருங்கை மற்றும் சொட்டு நீர் பாசனம் ஆகிய இனங்களில் பொருள் இலக்காக 13 எக்டர் பொருள் மற்றும் நிதி இலக்காக ரூ.4.20 லட்சமும் பெறப்பட்டு பொருள் இலக்கில் 13 எக்டர் பொருள் மற்றும் நிதி இலக்கில் ரூ.4.20 லட்சமும் சாதனை அடையப்பட்டுள்ளது.

வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், சூரிய ஒளி மின்வேலி அமைத்தல், சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் அமைத்தல். அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்தல்(SCP), பண்ணைக் குட்டை அமைத்தல், நீர் நிலைகளை தூர்வாருதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 290 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அரசிதழில் வெளியிடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையினை, அடுத்து விவசாயிகள் கூட்டம் துவங்குவதற்கு ஒரு வார காலம் முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட துறையின் முதல் நிலை அலுவலர்கள் மட்டுமே வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் 08 பயனாளிகளுக்கு ரூ.9,340 மானியத்தில் மின்கல தெளிப்பான், மரக்கன்றுகள், விசைத்தெளிப்பான் மற்றும் தையல் மிஷின் உள்ளிட்டவைகளும், தோட்டக்கலை துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு ரூ.2,20,000 மானியத்தில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர்களையும் வழங்கினார்.

பின்னர் 290 ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற்காக அனுமதி வழங்கிய கலெக்டர் கற்பகத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!