பெரம்பலூர் மாவட்ட ஆண், பெண்களுக்கான இலவச காகித பைகள், பொம்மை தயாரித்தல் மற்றும் பெண்களுக்கான ஆடை அணிகலன் தயாரித்தல் பயிற்சி!

schedule
2022-10-06 | 15:58h
update
2022-10-06 | 15:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district free paper bag making, toy making and costume making training for men and women

பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண் மற்றும் பெண்களுக்கான இலவச காகித பைகள், பொம்மை தயாரித்தல் மற்றும் பெண்களுக்கான ஆடை அணிகலன் தயாரித்தல் பயிற்சி 12th அக்டோபர் 2022 தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது.

Advertisement

பயிற்சியின் கால அளவு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. 10 மற்றும் 13 நாட்கள் நடைபெறும். பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது ஏஏஒய்-குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் 100 நாள் வேலை அட்டை கிராம பஞ்சாயத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றின் 2 நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்யவும்.

விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சங்கு பஸ் ஸ்டாப் அருகில், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 02:22:46
Privacy-Data & cookie usage: