பெரம்பலூர் மாவட்டத்தை கிராமப்புற பெண்களுக்கு சணல் பை, சணல் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி!

schedule
2023-05-14 | 17:47h
update
2023-05-14 | 17:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district free training for rural women to make jute bag, jute products!

பெரம்பலூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பெண்களுக்கான சணல் பை மற்றும் சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் இலவசமாக அளிக்கிறது. சணல் ஹேண்பேக்,பர்ஸ், ஃபைல், லன்ச் பேக், ஷாப்பிங் பேக், வாட்டர் பாட்டில் பேக், டோர் மேட், லெட்டர் ஹோல்டர், டேபிள் மேட், செல்போன் பவுச் ஆகியன செய்வது குறித்து சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது

பயிற்சி 13 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும். பயிற்சியின் போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
19 வயது முதல் 45 வயதுக்குபட்ட எழுத படிக்கதெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது ஏஏஒய் குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராம பஞ்சாயத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும்.

Advertisement

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் சங்கு பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். குடும்பஅட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 18.05.2023 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் பதிவு செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, 8489065899, +91 9488840328 என்ற எண்ணிலோ தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்து.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.08.2026 - 14:44:42
Privacy-Data & cookie usage: