பெரம்பலூர் மாவட்ட, அனைத்து வட்டாரங்களிலும் நாளை ஜமாபந்தி: கலெக்டர் தகவல்!

schedule
2023-05-22 | 09:26h
update
2023-05-22 | 09:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district, Jamabandhi tomorrow in all localities: Collector information!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் 1432-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டடங்களிலும் 23.05.2023 முற்பகல் 09.00 மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளது.

வேப்பந்தட்டை வட்டத்தில் தனது தலைமையில் பசும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட கை.களத்தூர் (கிழக்கு), காரியனூர், பசும்பலூர் (வடக்கு), பசும்பலூர் (தெற்கு) மற்றும் பாண்டகபாடி ஆகிய கிராமங்களுக்கும்,

பெரம்பலூர் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பெரம்பலூர் குறுவட்ட பகுதிக்கு புதுநடுவலூர், சிறுவாச்சூர், நொச்சியம், கல்பாடி (வடக்கு), கல்பாடி (தெற்கு) மற்றும் அயிலூர் ஆகிய கிராமங்களுக்கும்,

குன்னம் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் தலைமையில் கீழப்புலியூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூர் (தெற்கு), எழுமூர் (மேற்கு), மழவராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), ஆண்டிக்குரும்பலூர் மற்றும் அசூர் ஆகிய கிராமங்களுக்கும்,

ஆலத்தூர் வட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட காரை (மேற்கு), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம் மற்றும் கொளத்தூர் (மேற்கு) ஆகிய கிராமங்களுக்கும் நடைபெற உள்ளது, என தெரிவித்துள்ளார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.08.2026 - 12:23:50
Privacy-Data & cookie usage: