தடகள விளையாட்டில் சேர்வதற்கு பெரம்பலூர் மாவட்ட அளவிலான தேர்வு : கலெக்டர் தகவல்!

schedule
2023-04-11 | 00:32h
update
2026-08-31 | 12:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District Level Examination for Admission to Athletics : Collector Info!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாடு இந்தியா கேலோ திட்ட நிதியுதவியின் துவக்க நிலை தடகள பயிற்சிக்கான SDAT விளையாடு இந்தியா மாவட்ட மையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

Advertisement

இந்த SDAT விளையாடு இந்திய கேலோ இந்தியா மையத்தில் குறைந்தது 30 மாணவர்கள், 30 மாணவிகள் பயிற்சியில் சேர்ந்து அவர்களை மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச மற்றும் பன்னாட்டு அளவு மற்றும் ஒலிம்பிக் அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறச் செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சேருவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு வருகிற 13.04.2023 அன்று காலை 9.00 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் அரசு, தனியார் பள்ளி மற்றும் விடுதிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாத விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ளலாம். எனவே பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் 13.04.2023 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ள தேர்வில் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களை அதிக அளவில் கலந்து கொள்ளச் செய்து பயன் பெறச் செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 74017 03516 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 12:03:24
Privacy-Data & cookie usage: