தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள்

schedule
2018-03-23 | 13:10h
update
2026-07-05 | 03:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district level examinations for National Women’s Sports Competitions

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இராமசுப்ரமணியராஜா விடுத்துள்ள தகவல் :

மத்திய அரசின் கேலோ இந்தியா தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகள் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற 27.03.2018 அன்று பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஐி.ஆர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

இத்தேர்வுப்போட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்கள் 2017 டிசம்பர் 31-ந் தேதியன்று 25 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். வயதுச்சான்றிதழ் அவசியம் கொண்டு வருதல் வேண்டும்.

மேலும், இவ்விளையாட்டுப் போட்டிகளில் கோ-கோ, கபாடி, கையுந்து பந்து, சுடைப்பந்து, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுக்களுக்கு தலா 2 நபர்களும், இறகுப்பந்து , மேசைப்பந்து, நீச்சல், மல்யுத்தம், வளைகோல்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களுக்கு தலா 1 நபரும்,

தடகள விளையாட்டில் தலா 4 நபர்களும் தேர்வு செய்யப்படுவர், தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் அடுத்து நடைபெற உள்ள மாநில அணி தேர்வுப் போட்டிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செலவில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

எனவே, மேற்கூறிய தேர்வுப் போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 03:24:51
Privacy-Data & cookie usage: