பெரம்பலூர் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி : தந்தை ரோவர் கல்லூரி முதலிடம்

schedule
2018-02-06 | 13:04h
update
2018-02-06 | 13:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District-level hockey tournament: Thanthai Hans Roever College topped

பெரம்பலூர் மாவட்ட அளவில் ஆண்களுக்கு மட்டுமான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் இன்று காலை, பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

Advertisement

ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, வரிசைப்பட்டி எஸ்.வி.எஸ்., பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒதியம் வான்புகழ் வள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தந்தை ரோவர் உடற்கல்வித் துறை என எட்டு அணியினர் கலந்து கொண்டனர்.

இதில் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணஅணியினர் முதலிடத்தையும், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஐயன், தடகளப் பயிற்றுநர் க.கோகிலா, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 00:35:46
Privacy-Data & cookie usage: