பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு

schedule
2018-03-21 | 08:46h
update
2026-07-05 | 03:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district level monthly sports tournament announcement

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இராமசுப்ரமணியராஜா தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 27.03.2018 அன்று காலை 9.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

மார்ச் மாதத்திற்கான கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகள் தடகளம், நீச்சல், வாலிபால் மற்றும் கபாடி ஆகிய விளையாட்டுக்கள் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.

தனிநபர் போட்டிகளில் தனியாகவும், குழுப் போட்டிகளில் அணியாகவும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு கிடையாது. போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தடகளப் போட்டியில் 100 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், 1500 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல். ஆகிய போட்டிகளும் நீச்சல் 50மீ, 100 மீ, 200 மீ, 400 மீ, ப்ரி ஸ்டைல் 50 மீ – பேக் ஸ்ட்ரோக் 50 மீ – பிரஸ்ட் ஸ்ட்ரோக் 50 மீ- பட்டர் பிளை 200மீ இன்டிவிஜுவல் மிட்லே ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் வயது வரம்பு கிடையாது. ( Opent to All ) நடைபெற உள்ளது. குழு போட்டிகளாக வாலிபால் மற்றும் கபாடி ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பாpசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே, அனைத்து பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு உடற்திறனை மேம்படுத்தி பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 03:25:34
Privacy-Data & cookie usage: