பெரம்பலூர்: மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டி; எம்.எல்.ஏ சிவக்குமார் தொடங்கி வைத்தார்!

schedule
2026-08-02 | 17:12h
update
2026-08-02 | 17:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: District-level powerlifting competition; MLA Sivakumar inaugurated the event!

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த வலுதூக்கும் போட்டிகள் மற்றும் டெட்லிப்ட்டி போட்டிகள், மாவட்ட ஆணழகன் சங்கத் தலைவர் ஆனந்த் தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் ஜெயபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ சிவக்குமார் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Advertisement

இந்த போட்டியில் ஆண்கள் ஜூனியர் பிரிவில் கிலோ அளவில் 53, 59, 66, 74, 83, 93, 105, 120 மற்றும் 120+ என 9 பிரிவுகளிலும், ஆண்கள் சீனியர் பிரிவில் கிலோ அளவில் 59, 66, 74, 83, 93, 105, 120 மற்றும் 120+ என 8 பிரிவுகளாக நடந்தது. அதேபோல பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் கிலோ அளவில் 43, 47, 52, 57, 63, 69, 76, 84 மற்றும் 84+ என 9 பிரிவுகளிலும், சீனியர் பெண்கள் பிரிவில் கிலோ அளவில் 47, 52, 57, 63, 69, 76, 84, மற்றும் 84+ என 8 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

ஆண்களுக்கான ஜூனியர் டெட் லிஃப்ட் 53 கிலோவில் ஹரிஷ் 110 கிலோ தூக்கி முதலிடம் பெற்றார். 59 கிலோ எடை பிரிவில் சஃபியான், 66 கிலோவில் ரித்திஷ், 74 கிலோவில் சையதுஅதிப், 83 கிலோ எடை பிரிவில் சந்தீப்,105 கிலோ எடை பிரிவில் ரோகித் .93 கிலோவில் குருபிரசாத் முதலிடம் பிடித்தனர்.

பெண்களுக்கான டெட் லிப்ட்டில் 85கிலோ ஜூனியர் வினிஷா, வலு தூக்கும் பிரிவில் 43 கிலோ எடை பிரிவில் மோனிகா, 52 கிலோ பிரிவில் பிரியதர்ஷினி, 63 கிலோ பிரிவில் சந்தியயா மேலும் சீனியர் பிரிவில் 63 கிலோ பிரிவில் நந்தினி, 84 கிலோ பிரிவில் பிரபாவதி 84+ கிலோ பிரிவில் பவதாரிணி முதலிடம் பிடித்தனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக வலுதூக்கும் சங்க செயலாளர் ஜெயகாந்தன் வரவேற்றார். வலுதூக்கும் சங்க பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.08.2026 - 17:54:15
Privacy-Data & cookie usage: