பெரம்பலூர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கு, தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் : கலெக்டர் தகவல்!

schedule
2023-12-04 | 16:17h
update
2023-12-04 | 16:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district level speech competitions for students on the occasion of leaders’ birthdays: Collector information!

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கார், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு 07.12.2023 அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு 08.12.2023 அன்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு 12.12.2023 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்த நாளைமுன்னிட்டு பெரம்பலூர் பாரத சாரண சாரணியர் மாவட்டப் பயிற்சி மையத்தில் (தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியின் அருகில்) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000/- மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.2,000/– சிறப்புப் பரிசு என்ற வகையிலும்.

இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கபெறவுள்ளது.

இப்போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு காலை 9.00 மணிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு மகாத்மா காந்தி பேச்சுப்போட்டி காலை 9.00 மணிக்கும் மற்றும் ஜவகர்லால் நேரு பேச்சுப் போட்டி பிற்பகல் 02.00 மணிக்கும் தொடங்கப்படும் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 22:10:01
Privacy-Data & cookie usage: