பெரம்பலூர்: முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்; எம்.எல்.ஏ சிவக்குமார், கலெக்டர் ஷரண்யா தொடங்கி வைத்தனர்!

schedule
2026-09-09 | 13:58h
update
2026-09-09 | 13:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: District-level sports competitions for the Chief Minister’s Trophy; MLA Sivakumar and Collector Sharanya inaugurated the event.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மாவட்ட உள் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஷரண்யா மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ கே.சிவக்குமார் ஆகியோர் மேசை பந்து விளையாடி தொடங்கி வைத்தனர்.

Advertisement

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா முதல் பரிசாக ரூ. 3000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றா பரிசாக ரூ.1000 வழங்கப்படும் மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும். மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். பெரம்பலூர் மாவட்டத்தில் 37240 பேர் பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் ஆர். பொற்கொடி மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு, வீரர்கள், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.09.2026 - 14:09:42
Privacy-Data & cookie usage: