பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் : மேலப்புலியூர் தலைவராக மனோகரன் வெற்றி!

schedule
2022-07-12 | 16:36h
update
2022-07-12 | 16:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District Local Body By-election: Manokaran Wins as Melapuliyur President!

மேலப்புலியூர் ஊராட்சித் தலைவர் மனோகரன் 2022

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடந்தது.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேலப்புலியூர் ஊராட்சியின் மொத்த வாக்காளர்கள் 4916. பதிவான வாக்குகள் 3512 (74 சதவீதம்) செல்லாத வாக்குகள் 52. செல்லதக்க எண்ணப்பட்ட வாக்குகள் 3460.

ஊராட்சித் தலைவருக்கு மனோகரன், வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர். 2514 (72.66 சதவீதம்) வாக்குகள் பெற்ற மனோகரன் வெற்றி பெற்று, மேலப்புலியூர் ஊராட்சித் தலைவரானர். பல்வேறு பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இதே போல், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் 7வது வார்டு பதவிக்கு, சபியாபேகம், மும்தாஜ் பேகம் போட்டியிட்டனர். அதில் 153 வாக்குகள் பெற்ற சபியாபேகம் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

ஆலத்தூர் ஒன்றியம் பிலிமிசை வார்டு எண் 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, அன்னக்கிளி, விமாலாதேவி போட்டியிட்டனர். இதில் அன்னக்கிளி 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரூர் 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜெகவள்ளி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 03:19:01
Privacy-Data & cookie usage: