பெரம்பலூர் மாவட்ட தனியார் பள்ளி தாளாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

schedule
2021-10-23 | 18:07h
update
2021-10-23 | 18:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District Private School Chairmen Welfare Association Consultative Meeting and Election of New Administrators

தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் நல சங்க பெரம்பலூர் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் 23.10.2021 அன்று வெங்கடேசபுரம் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. சேவியர் பள்ளி மரியஜேசுதாஸ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மாணிக்கம் மற்றும் மாநில பொருளாளர் எ.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட பொருப்பாளர்கள், மாநில பொறுப்பேற்றுள்ளதால் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. சரஸ்வதி வித்யாலயா பள்ளி தாளாளா டி.ஜி.பழநிவேல் மாவட்ட தலைவராகவும், ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் செயலாளராகவும், தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளராக ஷமீத்ஷா, துணைத் தலைவராக கிறிஸ்டியன் கல்வி நிறுவனம் மித்ரா, துணைசெயலாளர் மணிகாந்த், துணை பொருளாளர் சேவியர் பள்ளி ஜேசுதாஸ், மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அம்மாபாளையம் ராமகிருஷ்ணா பள்ளி மதன்குமார் ஆகியோர் பொறுப்பேற்றனர். செயற்குழு உறுப்பினர்களாக கலாம் ஸ்கூல் பாக்கியராஜ், ஓம்சக்தி பள்ளி ரவிச்சந்திரன், அன்னை தெரசாபள்ளி சசிகலா, வெற்றி ஸ்கூல் ரஞ்சித், காந்திராம் பள்ளி ராமசாமி, ராகுல் பள்ளி பச்சமுத்து, மீரான் பள்ளி சையத்பாஷா, கேலக்ஸி பள்ளி ஜெயலட்சுமி தேர்வு செய்யப்பட்டனர். வருகிற நவம்பர் 1 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசு வழிகாட்டுதழின் படி கொரோனா நோய்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, மற்றும் தனியார் பள்ளிகளிள் கோரிக்கைகளை மாவட்டத்திலுள்ள தாளாளர்கள் அனைவரும் ஒன்றினைந்து ஆலோசனைக்கூட்டத்தின் படி எடுக்கப்பட்ட முடிவுகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் ஆல்மைட்டி பள்ளி செயல்அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 03:36:23
Privacy-Data & cookie usage: