பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலி பணியிடங்கள்

schedule
2020-11-06 | 13:48h
update
2020-11-06 | 13:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District Rural Development Panchayat Vacancies

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள 16 பணிப்பார்வையாளர் (அ) இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கள் ரூ.35,400 – 1,12,400 என்ற ஊதிய விகிதத்தில் படிகளுடன் நிரப்பப்பட உள்ளன. பணிப்பார்வையாளர் (அ) இளநிலை வரைதொழில் அலுவலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், காலிப்பணியிட விபரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.perambalur.nic.in என்ற இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

பணியிடத்திற்கான விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் (வளர்ச்சி) என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ வரும் டிச.08 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 06:33:40
Privacy-Data & cookie usage: