பெரம்பலூர் மாவட்ட பள்ளிகள் இணைய வழி வகுப்புகள் நடத்த 5 நாட்கள் தடை; அரசு அறிவிப்பு

schedule
2020-09-19 | 16:56h
update
2020-09-19 | 16:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district schools banned from conducting Online-classes for 5 days; Government Notice

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு:

Advertisement

2020-2021 ஆம் கல்வியாண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட 25.03.2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நாளது தேதி வரை திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு கற்றல் – கற்பித்தல் பணி பாதிப்படையக்கூடாது என்பதால் 2020-2021ம் கல்வியாண்டிற்கான பாடங்களை இணைய வழியாக நடத்துவதற்கு அரசானை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகளின் நலன் கருதி கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகள் இணையவழி மூலம் செப்.21 – 25 வரை நடைபெறாது என தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணையவழி வகுப்புகள் அந்த நாட்களில் நடத்தக்கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 03:06:17
Privacy-Data & cookie usage: