Perambalur District State Level 1st in Baby birth; Collector V.Santha Information

பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா குன்னம் வட்டம் கீழபெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 279 பயனாளிகளுக்கு ரூ.1.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வே.சாந்தா வழங்கினார்.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன் பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் அலுவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதில் கலெக்டர் வே.சாந்தா பேசியதாவது:

நம்முடைய அரசு குழந்தைப் பருவம் முதல் முதியவர் வரை கருத்திற்கொண்டு ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இச்சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழாவில் சுமார் 1.43 கோடி அளவிற்கு அரசின் உதவிகள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

மேலும் பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் குழந்தைப் பேறில் முதன்மையானதாக உள்ளது. இது ஆராக்கியமல்ல. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவது தாயின் உடல்நலம் கெட காரணமாக அமைகிறது. மேலும், அதிகமான குழந்தைகள் இருப்பதால் அவர்களுக்கு உணவு, உடை வழங்குவதில் சிரமம் ஏற்படும். குழந்தை ஆரோக்கியமற்று எளிதில் நோய்களால் பீடிக்கப்படலாம். எனவே ஆணோ பெண்ணோ 2 குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என தாய்மாh;கள் முடிவெடுக்கவேண்டும்.

பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர்க்க வேண்டும். சுய சார்பு பெண்களுக்கு மிகவும் அவசியம். மேலும் வீடு, கழிப்பறை மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் தங்களுக்கும், குழந்தைகளுக்கும் நோய்கள் ஏதும் அண்டாமல் பார்த்துக்கொள்ளலாம். உறிஞ்சுக்குழல்கள் வீடுகளில் அமைப்பதன் மூலம் நீரானது பூமியில் உறிஞ்சப்பட்டு, நன்னீர் சேமிக்கப்படுவதால் பூமியின் நீர்வளம் குன்றாமல் இருக்கும், என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் துறையின் மூலம் 113 பயனாளிகளுக்கு ரூ.17,16,000- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் நத்தம் பட்டாக்களையும்,

ஊரக வளர்ச்சித் துறை மூலம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் 23 பயனாளிகளுக்கு ரூ.41,10,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

வேளாண்மைத் துறை மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ.4,43,382- மதிப்பிலான சொட்டுநீர் பாசனம், விசைதுளைப்பான், சுழற்கலப்பை மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற நலத்திட்ட உதவிகளையும்,

தோட்டக்கலைத் துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.46,548- மதிப்பிலான தெளிப்பு நீர் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்,

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.28,156- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகளும்,

கால்நடைத் துறை மூலம் 100 பயனாளிகளுக்கு ரூ.39,09,500- மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகள் போன்ற நலத்திட்ட உதவிகளையும்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.15,200- மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளையும்,

கூட்டுறவுத் துறை மூலம் 10 பயனாளிக்கு ரூ.31,59,500ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ.8,56,863- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

பால்வளத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.1,500- மதிப்பிலான பால்தூக்குகளையும் என மொத்தம் 279 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 42 லட்சத்து 86 ஆயிரத்து 649- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வே.சாந்தா வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கீழப்பெரம்பலூர் நியாயவிலைக் கடைக்கு சென்று அங்கு மக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் இருப்புகளை ஆய்வு செய்தார். அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அக்குழந்தைகளின் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) தெய்வநாயகி, வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, கால்நடைத் துறை மண்டல இயக்குநர் மதனகோபால், கீழப்பெரம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சின்னபிள்ளை, சுகாதாரத் துறை துணை இயக்குநர் கீதாராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதேவி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சக்திவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன், குன்னம் வட்டாட்சியர் சித்ரா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!