பெரம்பலூர் மாவட்டம் என்றென்றும் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் ! மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் சூளூரை !

schedule
2017-08-28 | 09:42h
update
2026-07-03 | 11:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district will be the stronghold of the highest level! District Secretary Karthikeyan

பெரம்பலூர் மாவட்டம் என்றென்றும் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் ! புதிய மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் சூளூரைத்தார்.

பெரம்பலூர் இன்று காலை அதிமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்த பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement

பின்னர், அங்கு பேசியதாவது: இந்த இயக்கத்தையும், கழகத்தையும், புரட்சித் தலைவி அம்மாவிற்கு பின்னர் காக்க கூடிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வழியில் பெரம்பலூர் மாவட்டம் என்றுமே புரட்சித் தலைவி அம்மாவின் கோட்டையாக இருக்கும்,

அதை நிரூபிக்க வருகை தந்துள்ள அனைவருக்கும் முதல் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அம்மா இருக்கும் திசையை நோக்கி வணங்கி நன்றியை தெரிவித்துக் கொண்டு, கட்சியையும், கழகத்தையும் வழிநடத்தக் கூடிய வலிமை மிக்கக தலைவராக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இருக்கிறார்கள்.

ஒன்றரை கோடி தொண்டர்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரின் கரத்தை வலுப்படுத்துவோம். ஆட்சியையும் கழத்தையும் ஒன்று சேர்ப்போம். பெரம்பலூர் மாவட்டம் எப்போதும் அதிமுக கோட்டையாக இருக்கும் என சூளுரைப்போம் என பேசினார்.

அப்போது புதிதாக அறிவிக்கப்பட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ், வேப்பந்தட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்னுசாமி, பாடாலூர் வீரமுத்து, கவுல்பாளையம் செல்வக்குமார், கல்பாடி ஜெயக்குமார் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 11:44:20
Privacy-Data & cookie usage: