Perambalur: District Women’s ( Mahila) Court sentences youth to 40 years in prison and Rs. 1 lakh fine in POCSO case!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்திராஜன் மகன் ஆனந்த் (35) என்பவர் அவரது குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி குன்னம் போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு Cr.No : 368/23 U/s 5(n),6,9,(m),10, 5(L) r/w 6 of POCSO Act -ன் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டடு, இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆனந்த் என்பவரை குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் 5(l) r/w 6 of POCSO Act -ற்கு 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும், 5(n)-ற்கு 20 வருடம் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதம் என மொத்தம் 40 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் எனவும், இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசில் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.