பெரம்பலூர்: ஸ்டாலின் திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் டாக்டர். ஜெயலட்சுமி பிரச்சாரம்!

schedule
2026-04-09 | 21:22h
update
2026-04-09 | 21:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK candidate Dr. Jayalakshmi campaigns in the Veppanthattai West Union, urging voters to cast their ballots for the ‘Rising Sun’ symbol to ensure the continuation of Stalin’s schemes.

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னமங்கலம் ஊராட்சியில் வாக்குகளை சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டும் வாழ்த்தி வரவேற்றனர். அப்போது பொதுமக்களிடம் அவர் பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகை, ரூ. 8000 கூப்பன், காலை உணவுத்திட்டம், மகளிர் விடியல் பயணம், விவசாயிகளுக்கான விலையில்லா மோட்டார், நெல்லுக்கு ரூ. 3500 நிர்ணய விலை, முதியோர், கைம்பெண்கள், 50 வயதிற்கு மேற்பட்டு திருமணமாகத பெண்களுக்கு உதவித் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்வு, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை எடுத்துரைத்து பேசிய அவர் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்து, ஸ்டாலின் திட்டங்கள் தொடர வாக்களிக்க வேண்டும் என வாக்குகளை சேகரித்தார்.

Advertisement

எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இரா.பரமேஸ்குமார், ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் அன்னமங்கலம் செல்வக்குமார், தழுதாழை பாஸ்கர், பெரியம்மாபாளையம் தொண்டரணி ரமேஷ், அன்னமங்கம் முன்னாள் ஊராட்சித் தலைவர் குணசேகரன், பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி, நகராட்சி கவுன்சிலர் ஜெயப்பிரியா, உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணியை சேர்ந்த விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், மக்கள் விடுதலை கட்சி, ஆதிதமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனித நேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிடட கட்சிகளை முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஈச்சங்காடு, அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், தொண்டமாந்துறை, விஜயபுரம், அய்யர் பாளையம், கோரையாறு, பூமிதானம், சாஸ்திரிபுரம், புதூர்
சின்ன முட்லு, மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, தாழைநகர், தழுதாழை, இந்திராநகர், பெரியம்மா பாளையம், கள்ளப்பட்டி, நரசிங்கபுரம், உடும்பியம், வெங்கனூர், கிருஷ்ணாபுரம், வெங்கலம் பகுதிகளில் வேட்பாளர் வெங்கலம் எஸ்.டி ஜெயலட்சுமி வாக்குகளை சேகரித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2026 - 09:20:35
Privacy-Data & cookie usage: