பெரம்பலூர்: திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி கட்சியினருடன் சென்று தீவிர வாக்குகள் சேகரிப்பு!

schedule
2026-04-08 | 18:34h
update
2026-04-09 | 20:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK Candidate Jayalakshmi Engages in Vigorous Campaigning in Villages, Accompanied by Party Cadres!

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோரது தலைமையில், பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளர் எம்‌.இராஜ்குமார் முன்னிலையில், பெரம்பலூர்
சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெயலெட்சுமி இன்று சிறுவாச்சூர் கிராமத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் செ.அண்ணாதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் காங்கிரஸ்,,ம.தி.மு.க.தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக மாவட்ட மகளிரணி மாவட்ட அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர். முன்னதாக, வாக்குகள் சேகரிக்க சென்ற வேட்பாளர் ஜெயலட்சுமி, திமுக அரசின் தேர்தல் அறிக்கையையும், திமுக ஆட்சியின் சாதனைகளையும் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தார்.

Advertisement

பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள கவுல்பாளையம், நெடுவாசல், க.எறையூர், கல்பாடி, எறையசமுத்திரம், அ.குடிகாடு, அய்யலூர், சிறுவாச்சூர், விளாமுத்துர், நொச்சியம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், வெள்ளனூர், மேட்டூர், ரெங்கநாதபுரம், தம்பிரன்பட்டி, கீழக்கணவாய், புது வேலூர், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய கிராமங்கில் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஸ்குமார் உளளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.06.2026 - 08:36:48
Privacy-Data & cookie usage: