பெரம்பலூர்: வேப்பந்தட்டையில், அண்ணா பிறந்த நாள் விழா; திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் அழைப்பு!

schedule
2023-09-13 | 16:40h
update
2023-09-13 | 16:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK District Secretary Kunnam Rajendran’s call to attend Anna’s birthday party in Veppanthattai.

பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

காஞ்சி தந்த காவியத்தலைவர், உலகத்தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டிற்காகவும், தமிழ்நாட்டின் சிறப்பிற்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த அறிவியலாளர். “இப்படி தோற்கின் எப்படி வெல்லும்” என்று தம்பிமார் பெரும்படையை கண்டு நெஞ்சம் நிமிர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன். “மெட்ராஸ் ஸ்டேட் “என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து, தாய்க்கு பேர் தந்த தனி பெரும் தனயன். சுயமரியாதை சுடரொளி, சொக்க வைக்கும் சொற்பொழிவாளர், எழுத்து வேந்தர், தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 -வது பிறந்த நாளான 15.09.2023,
(வெள்ளிக்கிழமை ), காலை 9.00. மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு, மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் (எனது) தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில்,மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது .

Advertisement

இந்த நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், துணைப் பெருந்தலைவர்கள், கிளைக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2026 - 14:29:38
Privacy-Data & cookie usage: