பெரம்பலூர்: பட்ஜெட்டில் வஞ்சித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

schedule
2026-02-12 | 18:49h
update
2026-02-12 | 18:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK holds protest against the central BJP government for cheating on the budget!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் காந்தி சிலை முன்பு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் நடந்தது.

Advertisement

பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். திமுக மாவட்ட செயலாளர் வீ. ஜெகதீசன் கண்டன உரையாற்றினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி பொதுகுழு உறுப்பினர்கள் முகுந்தன் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ஆர்பாட்டத்தில், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் துரைராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில பொது செயலாளர் வக்கீல் த.தமிழ்ச்செல்வன் , விசிக பெரம்பலூர் சட்ட மன்ற மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அகஸ்டின், கலையரசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், டாக்டர்கள் கருணாகரன், ஜெயலட்சுமி, எசனை குணா, சிறுவாச்சூர் அழகேசன், வக்கீல் மதுபாலன், உள்பட ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பெரம்பலூர் நகராட்சி துணை தலைவர் ஆதவன் நன்றி கூறினார். கூட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து கோசங்கள் எழுப்பினர்..

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 10:46:29
Privacy-Data & cookie usage: