பெரம்பலூர்: திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பட்டிமன்றம்!

schedule
2025-04-18 | 17:00h
update
2025-04-18 | 17:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK hosts birthday party for Tamil Nadu Chief Minister M.K. Stalin!

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் முதல்வராக செயல்படுபவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என பெரம்பலூரில் நடந்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பட்டிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். பெரம்பலூர் மாவட்ட மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் தலைமையில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ர.ராகவி வரவேற்புரையில் நடந்தது. மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள் தமிழ்.கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ம.தமிழ்வேந்தன், பா.ரினோபாஸ்டின், அ.இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிறந்தநாள் விழா காணும் திராவிட மாடல் முதல்வரின் ஆகாயம் அளாவிய புகழுக்குக் காரணம் முத்தான சாதனைகளா? வித்தான இலட்சியங்களா? எனும் பட்டிமன்றத்தலைப்பில் தலைமை திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு நடுவராக இருந்து, சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வென்றுள்ளார் எனவும் சிறுபான்மை மக்களுக்கு அரனாக இருந்து வக்ஃபு வாரிய சட்டத்தையும் எதிர்த்து நின்று மற்ற மாநிலங்களுக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்‌ என்றும் பேசினார்.

Advertisement

இதில் முனைவர்.மானசீகன், கவிஞர்.மில்லர் மண்டேலா ஆகியோர் வித்தான இலட்சியங்களே எனும் தலைப்பிலும், முனைவர். பு.சி.கணேசன், முனைவர்.ராம.பூதத்தான் ஆகியோர் முத்தான சாதனைகளை
எனும் தலைப்பிலும் பேசினர்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்‌.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், ஆர்.முருகேசன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை சி.பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,

ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்‌.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ)அப்துல்பாரூக்,

மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், துணை அமைப்பாளர் கோவிந்தராஜன், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், அரும்பாவூர் பேரூர் செயலாளர்‌ ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்‌.மணிவாசகம், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் குமார், மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணா இள, நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.05.2026 - 07:16:01
Privacy-Data & cookie usage: