கொரோணாவிற்கு பலியான ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ படத்திற்கு பெரம்பலூரில் திமுக அஞ்சலி!

schedule
2020-06-10 | 14:45h
update
2020-06-10 | 14:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur DMK Pay tribute to photo of MLA J.Anbalagan Who had CoCID-19 dies in Chennai

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி திமுக எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகன் கடந்த 2ஆம் தேதி குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து சென்னை தி.நகர் மகாலட்சுமி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட ஜெ. அன்பழகன் உடலுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் ஜெ அன்பழகன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன் ஒருபகுதியாக மறைந்த எம்.எல்.ஏ.,ஜெ.அன்பழகன் படத்திற்கு பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி 2 நிமிடம் மௌனமாக இருந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் திமுக கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

அப்போது, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் க.அண்ணாதுரை, நகரச்செயலாளர் எம். பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 14:38:20
Privacy-Data & cookie usage: