பெரம்பலூர்: S.I.R விவகாரத்தில் திமுக இரட்டைவேடம்; திமுகவினரே கையெழுத்திட்டு வாக்காளர் திருத்தப்படிவங்களை BLO-விடம் வழங்குகின்றனர்! அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன் கலெக்டரிடம் புகார் மனு!

schedule
2025-11-08 | 17:31h
update
2025-11-08 | 18:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK’s double-dealing in the S.I.R issue; DMK members themselves are signing and submitting voter correction forms to the BLO! AIADMK District Secretary R. Tamilselvan files a complaint with the Collector!

பெரம்பலூர் கலெக்டர் அலுவகத்தில் இன்று அதிமுக சார்பில், அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான ஆர்.தமிழ்ச்செல்வன் கட்சியினருடன் சென்று பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மிருணாளினியிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், பூத் லெவல் ஆபீசர்களே வாக்களர்களுக்கு விண்ணப்பங்களை வினியோகிக்க வேண்டும் என்றும், திமுக வினர் வினியோகிக்க கூடாது என்றும் மனு கொடுத்த பின்னர். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது (சுருக்கம்):

இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி, S.I.R, பணி பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கென தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட BLO (பூத் லெவல் ஆபீசர்கள்) திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கை கோர்த்துக்கொண்டு, வாக்காளர்களிடத்தில் தி.மு.க.வினரே நேரடியாக விண்ணப்பப் படிவத்தை விநியோகித்து, பூர்த்தி செய்கிற விண்ணப்பப் படிவத்தையும் தி.மு.க.வினரே பெற்றுக்கொண்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Advertisement

இதை ஆதாரபூர்வமாக பெரம்பலூர் நகராட்சிக்கு வார்டு எண் 20-இல் அந்த பி.எல்.ஓ. இல்லாமல், தி.மு.க.வின் நகர்மன்ற உறுப்பினரே வாக்காளர் பட்டியலுடைய சேர்க்கை பணியில் கையெழுத்து போட்டு இருக்கிறார் என்பதை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளியிடம் அதிமுக சார்பில் மனு கொடுத்துள்ளோம்.

இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். இதற்கென்று நியமிக்கப்பட்ட அந்த பி.எல்.ஓ.வே விண்ணப்பத்தை விநியோகிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பத்தைப் பெற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தி.மு.க.வினுடைய அராஜகத்தை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம். அந்த கோரிக்கையை ஏற்று அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

கேள்வி: “வெறும் படிவங்கள் மட்டும்தான் கொடுக்கிறார்களா, அல்லது கூடுதலாக வேறு ஏதும் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்களா?”

அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன்: படிவங்களைக் கொடுத்து அவரே பூர்த்தி செய்து வாங்கினால், அவர்கள் இறந்துபோன வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா?

கேள்வி: அந்த மாதிரி விஷயங்கள் நடக்கக் கூடாது என்றதற்குத் தான் முதலில் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. இப்ப இந்த மாதிரி விஷயங்கள் தி.மு.க.வே செய்யுது இல்லையா?”

“தி.மு.க.வினரே அவர்களே இந்த வெளிவேஷம் போடுகிறார்கள். இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்ப்பதும், மறுபுறம் கள்ள ஓட்டை சேர்ப்பதிலுமே கைதேர்ந்தவர்கள் திமுக வைச் சார்ந்தவர்கள். 2002-இல் தான் வாக்காளர் திருத்தப்பணி நடைபெற்றது. இன்றைக்கு ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் இறந்தவர்களே பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர் இருக்கிறார்கள். இந்த குறைகளைக் களைய வேண்டும் என்பதற்காகத்தான் 22 ஆண்டுகாலத்திற்கு பிறகு தேர்தல் ஆணையம் இந்த எஸ்.ஐ.ஆர். (சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி)-யை ஈடுபட்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

முன்னாள் எம்.பிக்கள், சந்திரகாசி, மருதைராஜா, மாவட்ட அவைத் தலைவர் குன்னம் குணசீலன், அதிமுக முக்கிய பிரமுகர்கள் சித்தளி நாகராஜன், VGM @ வெங்கடாசலம், வெங்கலம், லட்சுமி ஒன்றிய செயலாளர்கள், கர்ணன், சிவப்பிரகாசம் மற்றும் வெங்கலம் தேவராஜன் பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் , கிளை நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 01:47:21
Privacy-Data & cookie usage: