பெரம்பலூர்: கரூரில் திமுக முப்பெரும் விழா! கட்சியினர் திரளாக பங்கேற்க, மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்‌ அழைப்பு!

schedule
2025-09-11 | 14:51h
update
2025-09-11 | 14:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK’s grand festival in Karur! District in-charge V. Jagatheesan invites party members to participate in large numbers!

கரூர் மாவட்டம், கரூர் – திருச்சி சாலையில் உள்ள கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில்
முப்பெரும் விழா நடைபெறுகிறது . 17.09.2025, அன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த முப்பெரும் விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். கழக துணைப் பொதுச்செயலாளருமீ மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது எனவும், முப்பெரும் விழா எனபது தி.மு.க.வின் குடும்ப விழாவாகும். விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து, சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட திமுக நிர்வாகிகள்,
தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிரனியினர், கழக முன்னோடிகள், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 13:29:21
Privacy-Data & cookie usage: