பெரம்பலூர்: திமுக சார்பில் சிறுவாச்சூரில், வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ பிரச்சாரம்!

schedule
2026-02-24 | 06:46h
update
2026-02-24 | 06:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK’s ‘Vellum Tamilpengal’ campaign in Siruvachur!

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் திமுக சார்பில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ பிரச்சாரம் பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ம.இராஜ்குமார் தலைமையில் நடந்தது.

Advertisement

இதில், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமையில் வீடு, வீடாக சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறியும், உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டர். க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ மூலமும் பொதுமக்களிடம் சாதனைகளை எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் வழங்கினர். ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் ஸ்டிக்கர்களை வீடு வீடாக பெண்களிட் திமுகவிற்கு வாக்குகள் கேட்டு ஒட்டப்பட்டது. பெரம்பலூர் தொகுதி பார்வையாளர் தங்க. சித்தார்த்தன், மாவட்ட பிரதிநிதி எஸ். அழகுவேல், ஒன்றிய திமுக பொருளாளர் ஆர் கலையரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், நகராட்சி உறுப்பினர் சித்தார்த், வழக்கறிஞர் செல்லையா, கிளைச் செயலாளர்கள் அழகேசன் இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 11:01:21
Privacy-Data & cookie usage: