பெரம்பலூர்: வரைவு வாக்காளர் பட்டியல்; அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார்.

schedule
2024-10-29 | 08:46h
update
2024-10-29 | 08:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Draft Electoral Roll; Collector released in presence of political parties.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை 2025க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரேஸ் பச்சாவ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை வெளியிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் 27.03.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 3,00,876 வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,73,764 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,74,640 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற தொடர் திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,803 ஆண் வாக்காளர்களும், 1,904 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும். 

148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,307 ஆண் வாக்களர்களும், 1,346 பெண் வாக்காளர்களும் 1 இதர வாக்காளரும் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக 147.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 352 ஆண் வாக்காளர்களும், 436 பெண் வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 216 ஆண் வாக்காளர்களும், 265 பெண் வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,

Advertisement

தற்போது வெளியிடப்படுகின்ற வரைவு வாக்காளர் பட்டியலின் படி 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடிகளும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், ஆக மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன.

 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 3,03,803 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,47,689 ஆண் வாக்காளர்களும், 1,56,084 பெண் வாக்காளர்களும், 30 இதர வாக்காளர்களும் உள்ளனர். 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம்; 2,75,937 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,36,431 ஆண் வாக்காளர்களும், 1,39,504 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் உள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 5,79,740 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,84,120 ஆண் வாக்காளர்களும், 2,95,588 பெண் வாக்காளர்களும், 32 இதர வாக்காளர்களும் உள்ளனர். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2025-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 29.10.2024 முதல் 28.11.2024 வரை விண்ணப்பங்கள் பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 16.11.2024 (சனி), 17.11.2024 (ஞாயிறு), 23.11.2024 (சனி), 24.11.2024 (ஞாயிறு) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 06.01.2025 அன்று வெளியிடப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி. 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / வருவாய் வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 11:25:50
Privacy-Data & cookie usage: