பெரம்பலூர்: போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு

குறும்படப் போட்டி: கால வரையறை வரை நீட்டிப்பு; கலெக்டர் தகவல்!

schedule
2024-09-13 | 15:45h
update
2024-09-13 | 16:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Drug Free Tamil Nadu – Short film competition: Deadline extended; Collector Information!

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான குறும்படப்போட்டி நடைபெறவுள்ளது. போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையிலும், போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்பதை வலியுறுத்தும் வகையிலும், இந்த குறும்படங்கள் அமைந்திட வேண்டும். 5 நிமிடத்திற்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும். இந்தப்போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது.

Advertisement

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் அனுப்பிவைக்க 16.09.2024 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அப்போட்டிகளில் பங்கேற்பதற்கான கால வரைமுறை 30.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறும்படங்களை dsection.tnpmb@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு google drive link ஆக அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து குறும்படங்களும் தேர்வுக்குழுவினர் பார்வையிட்டு முதல் மூன்று பரிசுகளுக்குரிய குறும்படங்களை தேர்வுசெய்வார்கள். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

இக்குறும்படப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000ம், இரண்டாம் பரிசாக ரூ.7,000ம், மூன்றாம் பரிசாக ரூ.5,000ம் வழங்கப்படும். பரிசு வழங்கப்படும் விழாவில் மூன்று குறும்படங்களும் மக்களின் பார்வைக்கு திரையிடப்படும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 03:53:44
Privacy-Data & cookie usage: