தடை செய்த, நாட்டு சாராயம் கடத்தியவரை கைது செய்த பெரம்பலூர் போலீசார்!

schedule
2021-12-10 | 14:49h
update
2021-12-10 | 14:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Dt. police arrest banned liquor smuggler

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சப்-இன்ஜ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார், இன்று பில்லங்குளம் – காரியானூர் சாலையில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, அவ்வழியாக, அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்ய எடுத்து வந்த நபரை கைது செய்து, நடத்திய விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள லெட்சுமணபுரம் சேர்ந்த ரத்தினம் மகன் மனோகரன் (54) என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 57 லிட்டர் நாட்டு சாராயத்தையும், அவர் வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 16:34:29
Privacy-Data & cookie usage: