Perambalur: Easter: Kunnam constituency AIADMK candidate Saranya canvasses for votes among devotees returning from prayers at a church!
குன்னம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சரண்யா அன்பழகன் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கூட்டணி கட்சியினருடன் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் தினந்தோறும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று காலை வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமாந்துறையில் உள்ள தேவலாயத்தில் இன்று ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு பிராத்தனை முடித்து வந்த கிறிஸ்தவர்களிடம், அதிமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிமுக வேப்பூர் ஒன்றிய செயலாளர் செல்வமணி உள்ளிட்ட அதிமுக, பாமக, ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உடன்சென்றிருந்தனர்.