பெரம்பலூர்: கல்வி ஒன்றே நிரந்தரமானது! ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் பெரம்பலூர் அம்மன் முத்தையா பேச்சு!!

schedule
2026-02-15 | 16:17h
update
2026-02-15 | 16:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Education is the only thing that lasts; Perambalur Amman Muthaiah’s speech at the incentive distribution ceremony!

பெரம்பலூர் ஸ்ரீ முத்தையா கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாவட்ட யாதவர்களின் 4ம் ஆண்டு குடும்ப விழா பெரம்பலூரில் உள்ள கர்ணம் சுப்பிரமணியம் மகாலில் நடந்தது.

அறக்கட்டளை நிறுவன தலைவர் அம்மன் முத்தையா தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கல்யாணி மெஸ் சுந்தரம், மாவட்ட செயலாளர் பிரகாரன், மகரளிணி செயலாளர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பொன். செல்வராஜ், விஜயா, துளிசி, சித்ரா ஆகியோர் உரையாற்றினர். நகர துணைத் தலைவர் அரிசிக் கடை குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.

பின்னர் 10, 12ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் அதிக மார்க் பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே ரூ.30 ஆயிரம், 20 ஆயிரம், 10 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகை என மொத்தம் ரூ. 2.50 லட்சம் வழங்கப்பட்டது. பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பெரியோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Advertisement

அறக்கட்டளை நிறுவன தலைவர் அம்மன் முத்தையா கூட்டத்தில் சிறப்புரையாற்றியதாவது:
கல்வி ஒன்றே உயர்வானது, திருட முடியாது. மற்றவை எல்லாம் நிரந்தரம் இல்லாதது. பாப்பா சவுமியா சொன்னது போல் படிப்புக்கு உதவி செய்தால் எதிர்கால சந்ததிகள் எங்கேயாவது உயர்ந்து நிற்பார்கள். அரசு துறைக்கு போக வேண்டும். அரசாங்க வேலைக்கு போக வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக நான் சொன்ன சொல்லை காப்பாற்றி வருகிறேன். என்னிடம் பித்தலாட்டம் இல்லை, அயோக்கியத்தனம் இல்லை, யாருடைய காசிலும் இந்த உதவிகளை உங்களுக்கு நான் செய்யவில்லை. என்னுடைய சொந்த பணத்திலிருந்து மனநிறைவோடு செய்கிறேன். இந்தத் தேர்தலில் பாடம் புகட்டுவோம். புகட்ட வேண்டியவர்களுக்கு ‌ அதற்கான குறுஞ்செய்தி உங்களுக்கு வந்து சேரும். இந்த 4 ஆண்டுகளில் 1000 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கல்வியை ஊக்கிவித்துள்ளோம். ஆறுதல் பரிசு என்பது உங்கள் குழந்தைகளும் மேடையில் ஏறி பரிசுகளை பெற வேண்டும் என்பது மட்டும் இல்லாமல் அவர்களுக்குள் ஓர் உந்து சக்தியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி சவுமியா இந்தாண்டு முதல் மதிப்பெண் பெற வேண்டும் என எண்ணம் கொண்டு, இந்தாண்டு அந்த சாதனை செய்து காட்டி முதல் பரிசை வென்றுள்ளார். அவருக்கு எனது பாராட்டுகள்.

நமது குறிக்கோள் நன்றாக படிக்கக்கூடிய குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். முடிந்தால் உதவி செய்கிறோம் முடியாவிட்டால் ஒதுங்கிக் கொள்கிறோம். யாருக்கும் உபத்திரம் கொடுப்பதில்லை தீங்கு செய்வதில்லை. இதை நான் உங்களுக்கு செய்வதால் எந்த ஆதாயத்தையும் உங்களிடம் எதிர்பாக்கவில்லை. என் வீட்டில் 4 டாக்டர்களை உருவாக்கி உள்ளேன். மனநிறைவிற்காக உங்களுக்கு உதவி செய்கிறேன், நீங்களும் முன்னுக்கு வரவேண்டும் என என்னிடம் என்னிடம் உள்ளதை உங்களுக்கு பகிர்ந்து உதவுகிறேன் எனவும், இதில் எனக்கு எந்த வித ஆதாயமும் இல்லை, கஷ்டபடுவேர்களுக்கு உதவு வேண்டும் என்ற நோக்கமே என பேசினார்.

ஏற்பாடுகளை டாக்டர்கள் ராம்குமார், ஜீவானந்தி, அறிவொளி, திலீபன் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக மாவட்ட தலைவர் ஜெயராமன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கீழக்கரை ராஜமாணிக்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். திருவள்ளுவர், மாவட்ட தொழிலாளர் அணிதலைவர் ஆர். மருதமுத்து, மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலசேகரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 02:31:43
Privacy-Data & cookie usage: