பெரம்பலூர்: கல்வி என்பது வெறும் பொருளீட்ட மட்டுமல்ல, சமூக மேம்பாட்டிற்காகவும் பயன்பட வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் ஆ.ராசா எம்.பி. பேச்சு!

schedule
2026-08-08 | 14:06h
update
2026-08-08 | 14:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Education should serve not merely to earn a livelihood but also for social upliftment, says A. Raja, MP, at the convocation ceremony.

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 18வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பியும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா பங்கேற்று பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 40 மாணவர்கள் உட்பட 1007 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றிய அவர் பேசியதாவது:

“நாங்கள் படித்த காலத்தில் கல்லூரிகளில் இருந்த அடிப்படை வசதிக் குறைபாடுகளையும் தற்போதைய கல்வி வளர்ச்சியையும் அவர் ஒப்பிட்டுப் பேசினார். பட்டம் பெறுவது வாழ்க்கையின் முற்றுப்புள்ளியாக அல்லாமல், அது ஒரு தொடக்கப் புள்ளியாக அமைய வேண்டும் என மாணவர்களை அறிவுறுத்தினார். ஒரு படித்த மனிதனின் அறிவு அவனது சமூகத்திற்கு பயன்படாமல் சமூகத்திற்கு எதிராகத் திரும்புமானால், அவன் விலங்கை விட கொடியவன் என சட்டமேதை அம்பேத்கர் கூறியதை அவர் நினைவூட்டினார்.

Advertisement

மாணவர்களின் படிப்பு என்பது வெறும் ஏட்டுப் படிப்பாகவோ, பதவி பெறுவதற்காகவோ அல்லது பணம் சம்பாதிப்பதற்காகவோ மட்டுமே பயன்படும் என்ற நிலை இருந்தால், இந்தியாவில் மதச்சண்டைகளும் பிளவுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். என்னுடைய பட்டமும், நான் பெற்ற அறிவும் இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்குப் பயன்படும்; சமூகத்தை ஒருங்கிணைக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன்” என்ற உயரிய சிந்தனையோடு ஒரு பத்து பேர் முன்வந்தால் கூட, இந்தியா முழுமையான அமைதியை அடையும். இந்தியாவில் பல்வேறு மொழிகள், உடைகள், நாகரிகங்கள் மற்றும் மாறுபட்ட உணவுப் பழக்கவழக்கங்கள் என பன்முகத்தன்மை காணப்பட்டாலும், வேற்றுமைகளை மறந்து அனைவரையும் ‘இந்தியர்’ என ஒன்றிணைப்பது நமது அரசியலமைப்புச் சட்டமே ஆகும். எனவே, சட்டம் படிக்காதவர்கள் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவசியம் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உலக மொழிகளில் தமிழ் மொழி மிக உயர்ந்த கடமையைக் கொண்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார். சார்லஸ் டார்வின், நியூட்டன் மற்றும் புருனோ போன்ற அறிஞர்கள் உலகத்தின் பரிணாமம் மற்றும் கோள்களின் இயக்கம் குறித்த அறிவியல் உண்மைகளை எடுத்துரைப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் அவற்றை தெளிவாக விளக்கியுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.பேரறிஞர் அண்ணா தன்னை ‘திராவிடன்’ என நாடாளுமன்றத்தில் முழங்கியது வேறு எந்த மாநிலத்தவருக்கும் எதிரானது அல்ல; அது தமிழர்களின் தனித்துவமான மொழி, நாகரிகம் மற்றும் பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றும் பெருமையாகும் என அவர் விளக்கினார். மேலும், ஜனநாயகத்திற்கு எதிரான சாதி, அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறை ஆகிய மூன்றையும் எதிர்த்து மாணவர்கள் போராட வேண்டும் என்ற அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரையையும் அவர் மேற்கோள் காட்டினார்.

பாரதிதாசன் கவிதைகளை மேற்கோள்காட்டிப் பேசிய அவர், மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து, உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும் மனித நேயத்திற்காகவும் மாணவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இறுதியாக, மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற ‘கீதாஞ்சலி’ கவிதை வரிகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறி, அச்சமற்ற மற்றும் குறுகிய பிளவுகள் இல்லாத உலகத்தை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என பேசினார். இதில் கல்லூரி, பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவியர் என 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.08.2026 - 14:11:19
Privacy-Data & cookie usage: