தம்பதிகள் கிணற்றில் குதித்து தற்கொலை

schedule
2016-02-25 | 14:20h
update
2026-03-27 | 22:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலுார் அருகே மகன்கள் தங்களை கவனிக்காததால் மனமுடைந்த முதியோர் தம்பதிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பெரம்பலுார் அருகே உள்ள மருதடி காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி,65, இவரது மனைவி தவமணி,55, இவர்களுக்கு அன்பழகன், லட்சுமணன், ராமசுந்தரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். லட்சுமணன் வெளிநாட்டில் உள்ளார். ராமசுந்தரிக்கு திருமணமாகிவி்ட்டது.

Advertisement

இதனால் சிவசாமி, தவமணி ஆகிய இருவரும் மகன் அன்பழகனுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. சிவசாமி கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாக தெரிகிறது.

சிவசாமி மற்றும் தவமணி ஆகிய இருவரையும் அவர்களது மகன்கள் சரியாக கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த தம்பதிகள் இருவரும் வேட்டியால் தங்கள் உடலைக்கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து அன்பழகன்,34, கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலுார் எஸ்.எஸ்.ஐ., பழனிசாமி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 22:13:51
Privacy-Data & cookie usage: