பெரம்பலூர் தேர்தல் விழிப்புணர்வு; துண்டு பிரசுங்களை வழங்கி புதிய பேருந்து நிலையத்தில் ராட்சத பலூனை பறக்கவிட்டார் கலெக்டர்!

schedule
2024-03-29 | 13:29h
update
2024-03-29 | 13:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Election Awareness; The collector flew a giant balloon at the new bus station by distributing leaflets!

பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பறக்கவிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளரும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து, நடத்தப்பட்டு வருகின்றது.

Advertisement

அதனடிப்படையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அனைவரும் வாக்களிப்போம்!! 100% வாக்களிப்போம்!!! என்ற வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை கலெக்டர் பறக்கவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்த மக்கள், பேருந்துகளில் பயணம் செய்த மக்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறிய மாவட்ட கலெக்டர், தேர்தல் நாள், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தில் இருந்த மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 05:23:36
Privacy-Data & cookie usage: