Perambalur: Election fever grips every corner of the district! Candidates campaign for votes, undeterred by the scorching summer heat.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் சாரைசாரையாய் கட்சி வேட்பாளர்கள் வாக்கு கேட்டு கிராமங்கள், நகரங்கள், பேரூர், என மாறி மாறி 2026 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது மற்றும் கூட்டணி கட்சியினருடன் வண்டிகளில் வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போதைய இந்த தேர்தல் திருவிழாவால், ஆரத்தி எடுக்கும் பெண்கள், பட்டாசு விற்பனையாளர்கள், மாலை தொடுப்பவர்கள், துணிக்கடைகள், உணவு தயாரிப்பவர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதனால் சிறு, குறு வணிகர்கள் மகிழச்சி அடைந்துள்ளனர். வாக்குகள் கேட்க பெரும்பாலோனர் கிராமங்களுக்கு பகலில் படையெடுத்து செல்வதால் அங்கிருக்கும் சிறு, குறு கடைகளில் வியாபாரம் அதிகமாகி உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்தல் இன்னும் 9 நாட்கள் உள்ளதால் தேர்தல் பணிகளை சிறிய கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.