பெரம்பலூர்: டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் ; கலெக்டர் தகவல்!

schedule
2024-05-23 | 17:10h
update
2024-05-23 | 17:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Eligible candidates can apply for Tenzing Norgay National Adventure Award; Collector Info!

மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், மாநிலங்களில் நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் பாராட்டத்தக்க வகையில் சிறப்பான சாதனை படைத்தவர்களை பாராட்டும் வகையில் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கி கவுரவித்து வருகின்றது.

Advertisement

அதன்படி 2023ஆம் ஆண்டிற்கு இவ்விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது பெற விண்ணபிக்க தேவையான விபரங்கள் https://awards.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ளது. தகுதியுடையவர்கள் தேவையான விபரங்களை 27.05.2024-க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து விண்ணப்பித்த விபரத்தின் நகலினை பெரம்பலுார் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு வழங்கிட வேண்டும்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச்சார்ந்த இவ்விருதுவிற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் உரிய தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.03.2026 - 10:56:46
Privacy-Data & cookie usage: