பெரம்பலூர்: ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்லத்தில் அவசர உதவி மற்றும் மீட்பு மையம் தொடக்கம்!

schedule
2026-02-12 | 18:12h
update
2026-02-12 | 18:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Emergency Aid and Rescue Center launched at Healing Hands Special Home!

பெரம்பலூரில் கடந்த 3 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் உள்ளவர்களுக்கான ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்லம் செயல்பட்டு வருகின்றது. தற்போது, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற சாலையோரம் சுற்றித்திரியும் நபர்களை மீட்டு பராமரிப்பதற்கும், சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் குடும்பத்துடன் ஒப்படைக்கும் விதமாக அவசர உதவி மற்றும் மீட்பு மையம் (ECRC) ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் துவக்கப்பட்டுள்ளது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நபர்களை மீட்கும் முயற்சியில் நீங்களும் உதவலாம். இதுபோன்ற நபர்களை கண்டால் ஓய்வு பெற்ற கல்வி அலுவலரும் அறக்கட்டளை தலைவருமாகிய நா.ஜெயராமன் தலைமையிலான க.மகேஸ்குமரன் 9842645884) அருண் ஆபிரகாம் (7402191296) உதிரம் நாகராஜ் (9655439514) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் ஆற்றும் கரங்கள் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 03:57:08
Privacy-Data & cookie usage: