பெரம்பலூர்: சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்: கலெக்டர் தகவல்!

schedule
2024-10-19 | 16:27h
update
2024-10-19 | 16:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Enrollment Camp for Denotified Tribes : Collector Information!

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவிதொகை, இயற்கை மரணத்திற்கான உதவிதொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவிதொகை, கல்வி உதவிதொகை, திருமண உதவிதொகை, மகப்பேறு உதவிதொகை, மூக்குக்கண்ணாடி செலவுதொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நலத்திட்டஉதவிகள் பெறுவதற்கு சீர்மரபின இனத்தைச் சார்ந்தவர்களாகவும், 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறலாம்.

மேலும், ஏற்கனவே, உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளவும் , புதுபித்தல் தவறிய உறுப்பனர்களை மீள வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும், புதிய உறுப்பினர் சேர்ககையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 12:12:06
Privacy-Data & cookie usage: