பெரம்பலூர்: ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு; கலெக்டர் தகவல்!

schedule
2026-03-27 | 12:34h
update
2026-03-27 | 12:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Entrance Exam for Admission to Military College; Collector Provides Information!

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி – 2027 பருவத்தில் 8ம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேருவதற்கான இத்தேர்விற்கு மாணவ, மாணவியர்கள் 01.01.2027 அன்று 11 ½ முதல் 13 வயதிற்குட்பட்டவராக (02.01.2014க்கு பிறகு, 01.07.2015க்கு முன்பு பிறந்திருந்தல் வேண்டும்). மேலும் 01.01.2027 அன்று அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ உள்ள மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

Advertisement

இச்சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை அஞ்சலில் பெற கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.600/-க்கும், பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555/-க்கும், “THE COMMANDANT, RIMC FUND”, DRAWEE BRANCH, HDFC BANK, BALLUPUR CHOWK, DEHRADUN(BANK CODE-1399) UTTARAKHAND-ல் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலை எடுத்து The Commandant, Rashtriya Indian Military College, Garhi Cantt, Dehradun, Uttrakhand, Pin-248 003 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.rimc.gov.in என்ற இணையவழி மூலமாகவும் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டிப்பு படியுடன்) தேர்வுக் கட்டுபாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 05.04.2026 அன்று மாலை 05.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கூடுதல், விவரங்களை www.rimc.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம். என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 11:09:58
Privacy-Data & cookie usage: