பெரம்பலூர்: முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2024-11-11 | 14:46h
update
2024-11-11 | 14:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Ex-Servicemen Grievance Camp; Collector Info!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்பர்ஸ் (SPARSH) மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) மற்றும் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் சார்பாக ஸ்பர்ஸ் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தலைமையில் நடைபெறுகிறது. இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

Advertisement

உயிர்சான்று அளிக்க இயலாதோர் மற்றும் தவறியோர் அதனை டிஜிட்டல் முறையில் அளித்திட முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் இம்முகாமில் தீர்வு காணப்படும். ஓர் ரேங்க் ஓர் பென்சன் (OROP) ஓய்வூதியம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். மேலும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் ஆதார் விபரங்களை ஸ்பர்சில் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள ராமசாமி திருமண மண்டபத்தில் 14.11.2024 வியாழன் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்கள் தங்களது படைப்பணிச் சான்று , ஓய்வூதிய கொடுப்பாணை, அடையாள அட்டை, பான்கார்டு மற்றும் வங்கிகணக்கு புத்தகத்துடன் நேரில் சென்று இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.08.2026 - 19:33:27
Privacy-Data & cookie usage: