பெரம்பலுர்: பாதுகாப்பற்ற முறையில் வைக்கபட்டிருந்த வெடிமருந்துகள் பறிமுதல்; போலீசார் விசாரணை!

schedule
2025-12-16 | 13:43h
update
2025-12-16 | 14:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Explosives stored in an unsafe manner seized; police investigation underway!

பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி கிராமத்தில் கல்பாடி, எறையூர் பகுதிகளில் தீவிரமாக குவாரிகளில் கற்கள் உடைத்தெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. கல்பாடி கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் கல்குவாரிக்கு பயன்படுத்தியது போக மீதம் இருந்த வெடிபொருட்களை பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவருக்கு சொந்தமான கீற்று கொட்டகையில் கிடந்தது. இது குறித்து பெரம்பலூர் RDO அனிதாவிற்கு மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அனிதா 561 நைட்ரைடு மிக்சர் (ஜெலட்டின் குச்சிகள்), 10 டெட்டர்னேட்டகளை கைப்பற்றி நடத்திய விசாரணையில், கல்பாடி கிராமத்தில், தொண்டைமாந்துறையை சேர்ந்த கண்ணுசாமி மகன் சம்பத் (45) உள்ஒப்பந்தம் அடிப்பபடையில் குவாரி நடத்தி வருகிறார். தனலட்சுமி வெடி மருந்து குடோனில் இருந்து வாங்கி வந்தது தெரிய வந்தது. RDO அனிதா உத்தரவின் பேரில், வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீசார் கவுள்பாளைத்தில் உள்ள செல்வக்குமார் என்பவருக்கு சொந்மான குடோனில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 18:59:50
Privacy-Data & cookie usage: