Perambalur: Family members must update their fingerprints on ration cards; Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் e-KYC கீழ் கைரேகைப் புதுப்பிப்பதை கட்டாயமாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணி நமது மாவட்டத்தில் 95.6% நிறைவடைந்துள்ளது. கைரேகையை வைத்து புதுப்பிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை 14006 ஆக உள்ளது. எனவே, நியாயவிலைக் கடைக்கு குடும்ப அட்டையுடன் சென்று ரேகை வைத்து e-KYC புதுப்பித்துக்கொள்ள வேண்டும். கைரேகை விழாதவர்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் தங்களது ஆதார் அட்டையில் விரல் ரேகை மற்றும் கண் பதிவை புதுப்பித்த பின்னரே e-KYC- யில் பதிவு செய்ய இயலும், ஆதார் அட்டையில் விரல் ரேகை / கண் பதிவு புதுப்பிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் / வேப்பந்தட்டை/ குன்னம்/ ஆலத்தூர் ஆகிய 4 வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள ஆதார் இ-சேவை மையங்களை அணுகி கைரேகை புதுப்பித்து, பின் சம்மந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் குடும்ப அட்டையுடன் நியாய விலைக் கடைக்கு சென்று e-KYC பதிவை புதுப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.