பெரம்பலூர் : மக்காச்சோளம் பயிருக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் ; கலெக்டர் தகவல்!

schedule
2024-10-14 | 17:33h
update
2024-10-14 | 17:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Farmers can avail crop insurance for maize crop; Collector Information!

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் போன்ற பயிர்கள் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பொழுது விவசாயிகளுக்கு பயிர் மகசூல் இழப்பீட்டுத் தொகை வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது ஷீமா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியால் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 16.10.2024 ஆகும்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் போதிய மழையின்மைக் காரணமாக மக்காச்சோள சாகுபடி பரப்பு மிகக் குறைந்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ளார் என விதைப்பு சான்று பெற்று அத்துடன் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பசலி அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி மேற்குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறும், மேலும், விவசாயிகள் விண்ணப்பிக்கும்பொழுது இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்த்திட முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.08.2026 - 12:50:55
Privacy-Data & cookie usage: