Perambalur: Father arrested for brutally beating his son to death while he was sleeping near the Ganesha statue in a family dispute!
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள அ.மேட்டுரை சேர்ந்தவர் ராஜா(43). இவருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி ரேவதி, இரண்டாவது மனைவி உமா. ராஜாவின் முதல் மனைவி ரேவதியின் மகன் ராசுக்குட்டி (20). இவர் நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவராக பணிபுரிந்து வந்தார்,
ராஜா அடிக்கடி தனது முதல் மனைவி ரேவதியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால், மகன் ராசுகுட்டிக்கும் தந்தை ராஜாவுக்கும் தனது தாயை அடிக்கடி ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று கூறி தகராறு ஏற்பட்டுள்ளது,
இந்நிலையில் அ மேட்டூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை வைத்து அலங்கார ஏற்பாடுகளை ராசுகுட்டியும் அவர்களது நண்பர்களும் செய்து வந்துள்ளனர். அதன் பிறகு அதே பகுதியிலேயே ராசுகுட்டி அவரது நண்பர்களுடன் படுத்து தூங்கி உள்ளார். அதிகாலை அங்கு சென்ற ராசுக்குட்டியின் தந்தை ராஜா கடப்பாரையால் ராசுகுட்டியின் தலையில் அடித்து அவரை துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். அதன்பிறகு ராஜா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இது குறித்து காலையில் பார்த்தவர்கள் அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ராசுகுட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ராசுக்குட்டியை கொலை செய்த கொலை செய்த தந்தை ராஜா மற்றும் அவரது இரண்டாவது மனைவி உமா ஆகிய இருவரையும் தேடிப் பிடித்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அ மேட்டூரில் பெற்ற மகனை தந்தை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.