பெரம்பலூர்: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது; கலெக்டர் தகவல்!

schedule
2025-12-08 | 12:20h
update
2025-12-08 | 12:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Thanthai Periyar Award for Social Justice; Collector’s information!

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற விருப்பமுடையவர்கள் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் செய்த நபர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Advertisement

விண்ணப்பங்களை தமிழ்நாடு முதலமைச்சரால் தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட விருதாளருக்கு ரூ.5 லட்சம், விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படும்.
தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 19:09:16
Privacy-Data & cookie usage: