பெரம்பலூர்: அறுவடை இயந்திரத்தில் சேலை சிக்கி விவசாய பெண் கூலித் தொழிலாளி பலி!

schedule
2026-08-11 | 12:18h
update
2026-08-11 | 12:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Female farm laborer dies after her saree gets caught in a harvesting machine!

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமான வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சூரிய காந்தி அறுவடை பணி இன்று நடந்தது. அதே ஊரைச் சேர்ந்த சிங்காரம் (60) என்பவருக்கு சொந்தமான அறுவடை எந்திரம் சூரியகாந்தி பூக்களை பிரித்தெடுக்கும் பணிக்கு வந்தது. இதில் அய்யலூர் இளங்கோ நகரைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி பானுமதி (50) அறுவடை செய்த சூரிய காந்தி பூக்களை இயந்திரத்தில் அள்ளிக் கொட்டும் பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பானுமதியின் சேலை இயந்திரத்தில சிக்கியது. இதில் இயந்திரத்தினுள் இழுக்கப்பட்ட பானுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 12:20:29
Privacy-Data & cookie usage: